"விஜய் கட்சி 6 மாதம் தான், அதற்கு மேல் தாங்காது"- அமைச்சர் விமர்சனம்
விஜய் கட்சி 6 மாதம் தான், அதற்கு மேல் தாங்காது என அமைச்சர் தாமோ அன்பரசன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே அரசியலுக்கு வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்னவென்று நாம் பார்த்துவிட்டோம். விஜய்காந்த் கட்சி ஆரம்பித்து இன்று என்ன ஆனா? அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்கு பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது.
சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம்” என்றார்.