தளவாய் சுந்தரத்திற்கு RSS பேரணியால் பறிபோன பதவி 40 நாட்களில் திருப்பி கிடைத்தது!

 
தளவாய் சுந்தரத்திற்கு RSS பேரணியால் பறிபோன பதவி 40 நாட்களில் திருப்பி கிடைத்தது!

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

#BREAKING | என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை - அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் கருத்து.. 

RSS பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் வகித்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பதவியைப் பறித்தால் கவலை இல்லை என தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. RSS பேரணியை தொடங்கிவைத்ததால் மறுதினம் அதிமுக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு, 40 நாட்களில் மீண்டும் அதே பொறுப்பை வழங்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.