கீழடி அறிக்கைகள் தாமதம் ஏன்?: நாடாளுமன்றத்தில் தென்காசி எம்.பி கேள்வி
Dec 16, 2024, 21:03 IST1734363206538
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட கீழடி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுவதில் இன்னும் தாமதம் ஏன்? என தென்காசி எம்.பி. டாக்டர். ராணி ஸ்ரீகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட கீழடி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுவதில் இன்னும் தாமதம் ஏன் என்று ஒன்றிய அரசிடம் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் நடைப்பெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் பட்டியல் அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட தேதியுடன் வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.