டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்- டெண்டர் கோரியது

 
tasmac

டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

டாஸ்மாக் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10.. ஜனவரி 19 முதல் அமல்! காலி  பாட்டிலை கொடுத்து பணம் பெறலாம்! | Rs 10 for taking back empty liquor  bottles will be extended to more ...

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மது குடிப்பவர்கள்  மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னை, சுற்றுலா தலங்களில் அதிகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து  நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை, மது கடைகளிலேயே திரும்ப பெற டாஸ்மாக் முடிவு செய்தது. தற்போது, நீலகிரி, பெரம்பலுார், கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்படுகின்றன.

அதன்படி, மது பாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என்று நான்கு மண்டலமாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.