மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் வைத்து சமைத்த கொடூரம்!

தெலுங்கானாவில் மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் வைத்து சமைத்து கூவத்தில் வீசிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை வழக்கில் மாட்டிக்க கூடாது என்பதற்காக மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை குக்கரில் வைத்து சமைத்துள்ளார். பின்னர் சமைக்கப்பட்ட உடல் பாகங்களை குளத்தில் வீசியுள்ளார்.
பின்னர் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகம் ஆடியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கணவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.