சம்பளம் கேட்ட ஆசிரியருக்கு பிரம்பு அடி- பள்ளி தாளாளர் அடாவடி
ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் முறையாக ஊதியம் வழங்க கோரிய ஆசிரியரின் கணவரை பள்ளியின் தாளாளர் கம்பை எடுத்து அடித்து விரட்டும் வீடியோ வைரலாகிவருகிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் நெடுஞ்சாலையில் உள்ள சண்முகம் மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் பணி செய்யும் ஆசிரியயைக்கு கடந்த சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பள்ளியின் தாளாளரான மாதவனிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான ரஞ்சிதாவை பணியிலிருந்து விலகுமாறு, பள்ளியின் தாளாளர் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் பணியில் இருந்து நின்றுவிட்டார். மேலும் பணி செய்த காலத்திற்கான ஊதியத்தை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பள்ளியின் தாளாளர் மாதவன் 20-ஆம் தேதி பள்ளிக்கு வாருங்கள் ஊதியத்தை தருகிறேன் என தெரிவித்து இருக்கிறார்
அன்றைய தினம் தனது குழந்தையுடன் பள்ளிக்குச் சென்றபோது பள்ளியின் நுழைவாயில் அடியாள் போல் நின்று கொண்டு பள்ளியில் நுழைய சென்ற ஆசிரியர் கணவரை கம்பை எடுத்துக்கொண்டு அடித்து விரட்டும் போது, ஆசிரியரின் மகன் அழுது கொண்டு ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.