மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் கைது!

 
 பாலியல் தொல்லை

ஈரோட்டில் பள்ளி மாணவிகளுக்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2,700 ரவுடிகள் கைது : சென்னை போலீஸ் அதிரடி | Dinamalar Tamil News

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் மேல்நிலை பள்ளியில், +2 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த புகாரில் போக்சோ சட்டத்தில், உயிரியல் பாட ஆசிரியர் திருமலை மூர்த்தியை(49) ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பாடம் நடத்தும் போது தவறான முறையில் தொட்டு பேசுவதாகவும், இரட்டை அர்த்தங்களுடன் பேசுவதாகவும், நடனம் ஆட சொல்லி வற்புறுத்துவதாகவும் அவரிடம் பயின்ற 3 மாணவிகள் 1098 சைல்டு ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய  குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் மற்றும் மாணவியர்கள் சிலரிடம், ஈரோடு ஏ.டி.எஸ்.பி., கனகேஸ்வரி, சி.இ.ஓ., ராமகிருஷ்ணன், பெருந்துறை ஏ.டி.எஸ்.பி., கவுதம் கோயல் ஆகியோர், நேற்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் ஆசிரியர் திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்