ஓரினச்சேர்க்கை மோகம்- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதே பள்ளியில் பணிபுரியும் வரலாற்று ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் கீழக்கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல்(38). இந்நிலையில் அந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் வரலாற்று ஆசிரியர் சக்திவேல் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு பின்னர் இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சக்திவேலை கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியில் பணி புரியும் மூன்று மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.