வரி ஏய்ப்பு- திண்டுக்கல் நகை கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

 
ச்

திண்டுக்கல்லில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி நகைக்கடை அதிபருக்கு சொந்தமான 3 நகை கடைகள் மற்றும் 2 வீடுகளில் 2வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

RAID TTN

திண்டுக்கல்லில் 75 வருடங்களுக்கு மேலாக மேற்கு ரத வீதியில் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர்கள்  தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜ். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு நகைக்கடை திண்டுக்கல் RS சாலை செயல்பட்டு வருகிறது.  அதேபோல் ஒட்டன்சத்திரத்திலும் இவர்களுக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று 03.01.25  மதியத்திற்கு மேல் தினேஷ் மற்றும் தீரேஜ்க்கு சொந்தமான மூன்று நகைக்கடைகள் மற்றும் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜ் ஆகியோரது வீடுகளில் 6 கார்களில் வருகை தந்த வருமான வரித்துறை மதுரை மண்டல கூடுதல் இயக்குனர் மைக்கேல் ஜெரால்டு தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நகைக்கடையின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே தற்போது வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருவதாகவும், மேலும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இரவு முழுவதும்  சோதனை தொடர்ந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது நாளாக இன்றும் 04.01.25 கடைகள் மற்றும் வீடுகள் என ஐந்து இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது