ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக மாணவி கூறவில்லை - காவல் துறை மறுப்பு

 
Anna
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், ஞானசேகரன்
ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் 
குழுவிடம் கூறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோ இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர். இதனிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண்,  ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக இன்றைய விசாரணையிலும் கூறியதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், ஞானசேகரன்
ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் 
குழுவிடம் கூறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த எந்த நபரும் உடந்தையாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண், ஞானசேகரன்
ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் 
குழுவிடம் கூறவில்லை. ஆதாரமற்ற அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், விசாரணையையும் பாதிக்கக்கூடும். விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.