'தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள்’- சேகர்பாபுக்கு தமிழிசை பதிலடி

 
tamilisai

ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது என பாஜக மூத்த தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

என் மக்கள்.. எனக்கு தமிழகத்தில் வேலை இருக்கிறது.. சேகர் பாபுவிற்கு ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி | Sekar Babu vs Tamilisai Soundararajan:  Tamilisai Soundararajan ...

குளத்தில்கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தமிழிசை செளந்தரராஜன், “அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார்  தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே...  வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்... அரசுஅமைக்கும் பூங்காவிலேயே  தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... 


நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம்  சாத்தியம்... இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்....” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.