பிரதமர் மோடியை பொறுத்தவரை ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை- தமிழிசை

 
விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்' - தமிழிசை

அதானி விவகாரத்தில் மத்திய அரசும், பாஜகவும் விளக்கம் கொடுத்துவிட்டார்கள், பிரதமர் மோடியை பொறுத்தவரை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் தேவை; இப்போது தேவையில்லையா?' - தமிழிசை|  Telangana governor tamilisai soundararajan press meet in tiruchirappalli


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யானைகளை புத்துணர்ச்சி படுத்துவதற்கும், அமைதிப்படுத்துவதற்கும் கண்காணிக்க வேண்டும். விலங்கின மருத்துவர்கள் வைத்து தொடர்ந்து கண்காணித்து மனநலத்தை உடல் நலத்தையும் கண்காணிக்க வேண்டும். திருநெல்வேலியில் யானை அருகே செல்லாதீர்கள் என கூறுகிறார்கள். ஆன்மீக ரீதியாக கோவிலில் யானை வைத்திருப்பது பயமுறுத்துவதற்காக இல்லை. யானை பாதிக்கப்பட்டால் பாகனாக இருந்தாலும் பிரச்சனை வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விவசாயிகளை அழைத்து இருக்கிறார். இனி யாரையெல்லாம் அழைப்பார், இது உண்மையான நடவடிக்கையா அல்லது சூட்டிங்கா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதானி விவகாரத்தில் மத்திய அரசும், பாஜகவும் விளக்கம் கொடுத்துவிட்டார்கள், பிரதமர் மோடியை பொறுத்தவரை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதானி விவகாரத்தில் தமிழ்நாடு போன்ற இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் அரசுகள்தான் பதில் சொல்ல வேண்டும். 2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.