“விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது”- தமிழிசை
விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது. துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை ஏன்? துணை முதல்வரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசுக்கு அவசரம். தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால் இங்கு எங்கே ஜனநாயகம் இருக்கிறது? இது ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது. முடியாட்சியை நோக்கி திமுக சென்று கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியலில் தவறான முன்னுதாரணம்.
காந்திக்கும், லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகுபாடின்றி மரியாதை செலுத்தியுள்ளோம். அனைத்து துறைகளிலும் தமிழக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது” என்றார்.