தமிழிசை, பிரேமலதா, செல்வப்பெருந்தகையின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! காரணம் என்ன?

 
தமிழிசை, பிரேமலதா, செல்வப்பெருந்தகையின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

premalatha

தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, அவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்படும். 6 மாதங்களுக்கு ஒரு முறையும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும். 

Tamilisai

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் மறைந்ததாலும், தெலங்கானா ஆளுநராகவும், புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை அளுநர் பதவியை துறந்ததாலும் பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை உள்ளிட்டோரின் வீடுகளில் இருந்து காவலர்கள் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கேட்டுக்கொண்டதால், அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.