சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்..

 
CM MK Stalin Visit US

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த 29ம் தேதி  சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் 6  முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில்  ஓமியம் நிறுவனத்துடன்  ரூ. 400 கோடி  மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -  ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்..   இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில்,  புலம்பெயர் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,  இன்று சான் பிரான்சிஸ்கோவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஆரத்தி எடுத்தும், மலர்கொத்துகள் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் சிகாகோவில் அயலக தமிழர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச இருக்கிறார்.