தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் ஒத்திவைப்பு!!

 
stalin

தமிழக அமைச்சரவை கூட்டம் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

TNGOVT


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் 4வது முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், வெள்ள பாதிப்பு நடவடிக்கையின்போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தக்வல்கள் வெளியாகின.

cm stalin

இந்நிலையில் மழை காரணமாக மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், நாளை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணி அளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது தமிழகத்தின் பல  மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, நாளை மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.