முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது!!

 
stalin

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் இந்தாண்டு இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

stalin

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அறிக்கை அளிக்க முதல்வர்,  அமைச்சர்கள் குழுவை நியமித்த நிலையில்,  அதன் அடிப்படையில் நிவாரணம் மற்றும் சாலை பராமரிப்பு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

cm stalin

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.  முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் 4வது முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு நடவடிக்கையின்போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.