தமிழக ஆயுதப்படை டி.ஜி.பி. மத்திய பணிக்கு இடமாற்றம்!

தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநராக மகேஷ் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராக நான்கு ஆண்டுகள் பதவி வகிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.