தனுஷ் மீது நடவடிக்கை ஏன்?- திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி பேட்டி

 
தனுஷ்

5 நடிகர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதே இல்லை என ஓர் ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்தோம் என நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, “புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதும், நிறுத்துவதும் நடிகர்கள் கையில்தான் உள்ளது. நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள நாங்கள் கூறவில்லை. இந்தி, தெலுங்கில் உள்ளது போல ஷேரிங் முறைக்கு வரச் சொல்லிக் கேட்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் முதலீட்டாளர்களாக உள்ளோம், நாங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறோம்.

ஒரு படம் தோல்வி அடைந்தாலும் நடிகர்களின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது. 5 நடிகர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதே இல்லை என ஓர் ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்தோம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நடைமுறைப்படுத்தாமல் இருந்தோம். தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பதால், ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறினார்.