பயணிகளுக்கு இனிப்பான அப்டேட்..! விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஆரம்பம்..!

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் தொலை தூரங்களுக்கும் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அரசு, தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்துமே கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேன்டும் என்று அரசு உத்தரவிட்டது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையின் மிகப்பெரிய அடையாளமாக இந்த பேருந்து நிலையம் மாறியிருக்கிறது.
கோயம்பேட்டில் இருந்து தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் புறநகர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் சிரமம் இன்றி கிளாம்பாக்கம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் ரயில் நிலையம் எப்போதும் கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பேருந்து நிலையத்திற்கு ஆகாய நடைமேடை அமைக்கப்படுகிறது.
எனவே இந்த ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் சேகர் பாபு, ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு கூறியதாவது:-
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முன்னேற்றம் குறித்து முடிக்க சிஎம்டிஏ அதிகாரிகள் மூலமாக தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பணிகளை ஆய்வு செய்து வருகிறொம். இவ்வாறு அவர் கூறினார்.