பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்; திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய தயார்- எஸ்.வி.சேகர்
அந்தணர் நலவாரியம் உள்ளிட்ட பிராமண சமுதாயத்தினரின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினால் திமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “பாஜகவில் 10 ஆண்டுகள் இருந்து நான் பட்ட பாடு எனக்கு போது. இனப்படுகொலை பிராமணர்களுக்கு பாஜகவில் உள்ளே தான் நடக்கிறது. பா.ஜ.க.வில் இருந்து முற்றிலுமாக வெளியேறி விட்டேன்... அக்கட்சியில் இருந்து ஒரு பலனும் இல்லை, ஆகவே விலகிவிட்டேன். பாஜகவை நம்புவது வீண். நான் ஒரு இந்தி்யன், தமிழன். ஒரு திராவிடன்... இனி எந்தவொரு கட்சியிலும் சேரமாட்டேன். மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் ஆல் சேர்த்தால் 50 ஆண்டுகளானாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. அண்ணாமலை அரசியலுக்கு மட்டுமல்ல எதுக்குமே அவர் பிரயோஜனம் இல்லாதவர். கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான்.... கான்கிரீட் எப்படி தாமரை மலரும்?
பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்யவும் தயார்.. எல்லோருக்கும் எல்லாம் என்கிறார் விஜய். இதையெல்லாம் நடக்குற விஷயமா? அவர் தனது கேரவனுக்குள் அனைவரையும் விடுவாரா? அரசியலில் விஜய் மைனசும் இல்லை, பிளஸ்சும் இல்லை. விஜய்க்காக கூட்டம் வரும். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா..? என்றால் அது கேள்விக்குறி. ஓட்டாக மாற்றவேண்டிய திறமை விஜய்க்கு இருக்க வேண்டும்” எனக் கூறினார்.