சூர்யாவின் எலிவேட்டை- கொந்தளித்த பாமக மாநில து.பொ.செ.

 
ச்

எலிவேட்டை என்று தலைப்பு வைத்துவிட்டு பின்னர் வியாபார நோக்கத்திற்காக ஜெய்பீம் ஆனது.   உண்மையான  எஸ்.ஐ. அந்தோணிசாமி முதலியார் என்பவருக்கு குருமூர்த்தி பெயர் வைத்து பின்னாடி வன்னிய கலசத்தை காட்டியது.  குறவர் சமூதாய கதையை இருளர் சமூகம் ஆக்கியது. என பொய்பீம் கதை நீள்கிறது என்று பாமகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதனால் சூர்யாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், மயிலாடுதுறை பண்ருட்டி பகுதிகளை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் சூர்யா படங்கள் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

s

ஒடிடியில் வெளியானதால் தான் ஜெய்பீம் தப்பித்துக் கொண்டது.  இல்லையென்றால் தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறது.

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. எம். கே. பாஸ்கரன் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது ,  எலி வேட்டை என்கிற திரைப்படத்தினை தயாரிப்பு அந்தத் திரைப்படத்திற்கு நேர் எதிர்மறையாக சித்தரித்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டிய சூர்யா, ஜோதிகா ஆகியோர்  ஜெய்பீம் என்கிற படத்தை தயாரித்து வெளியிட்டனர்.   இந்தத் திரைப்படம் ஒடிடியில் வெளியிட்டுள்ளார்கள் என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.  இதுவே திரையரங்குகளில் ரிலீசாகி இருந்தால் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

sst

 அவர் இனி வரும் நாட்களில் சூர்யா படங்களை கரூரில் திரையிட தடை விதிக்க வேண்டும்.   கரூரில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சூர்யா ஜோதிகா நடிக்கும் படங்களை தியேட்டர்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று பாமக விற்கு அறிவுறுத்தினார்.

 அவர் மேலும்,   நடிகர் சிவகுமார் தனது மூத்த மகன் சூர்யாவை நல்ல முறையில் வளர்க்க வில்லை.   தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வளர்த்துள்ளார் .  அவர் வன்னியர் சமுதாயத்தினரையும் பாமகவினரையும்  மோதவிட நினைக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.  

p

 உண்மையான  பார்வதிக்கு,  தான் சம்பாதிக்கும் பணத்தில் சூர்யா ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கும், பாஸ்கரன்,  

 ஜெய்பீம் படத்தின் இயக்குனர் யாரோ சிலரை திருப்திபடுத்த இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.  நடிகர் சூர்யாவும் இல்லாத ஒரு டிரஸ்ட்க்கு போலியான ஒரு அட்டை படத்தை காசோலை மூலம் காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றி அவரிடம் ஒரு கோடி கொடுத்தது போல் நடித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.