சூர்யா நீட்டிய கல்விக்கரம் - ஒரு ஏழை மாணவி இன்று ராணுவத்தில் உயர் அந்தஸ்தில்!

 
சு


 இந்த மனசுக்கு தான் உங்களை இத்தனை கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.  ஜெய்பீம் விவகாரத்தில் நெட்டிசன்கள் இப்படி போற்ற என்ன காரணம்?

  நீட் உள்ளிட்ட கல்வி விவகாரங்களில் அடிக்கடி நடிகர் சூர்யா தலையிட்டு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்றாத அதற்கு காரணம் கல்விக்காக அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம் தான். கல்வியால் மட்டுமே சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற எண்ணம்தான்.

ட்ர்

அந்த  கல்விக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர் நீட்  உள்ளிட்ட கல்வி விவகாரங்களில்  தலையிடுகிறார்.  குரல் கொடுப்பதோடு அல்லாமல் அவர் கரம் கொடுத்தும் வருகிறார்.   அகரம் அறக்கட்டளை தொடங்கி பல்லாயிரக்கணக்கானோருக்கு  கல்வி உதவி அளித்து வருகிறார்.  கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார் சூர்யா. அதிக மதிப்பெண்கள் எடுத்து மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ மாணவிகளுக்கும்,  தாய் தந்தையரை இழந்து படிக்க வசதி இல்லாத,  ஏழ்மை நிலையிலிருந்து படிக்க வசதி இல்லாதவர்களுக்கு  கல்வி உதவி அளித்து வருகிறார்.  

 பல்லாயிரம் பேருக்கு அவர் கல்வி கண் திறந்து இருப்பதால்தான் இன்றைக்கு ஜெய்பீம் பட விவகாரத்தில் அவருக்கு இத்தனை ஆதரவு கரங்கள் நீள்கின்றன என்று சொல்லிவருகிறார்கள் நெட்டிசன்கள்.  

 அகரம் அறக்கட்டளையால் கல்வி உதவி பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள்.   சூர்யாவால் கல்வி உதவி பெற்ற ஆதரவற்ற மாணவி கிருஷ்ணவேணி மருத்துவராகி இன்றைக்கு ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் உச்சம் தொட்டிருக்கிறார்.

ச்ச்

    தாய்,  தந்தையை இழந்த ஏழாம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி அதற்குமேல் படிக்க வசதி இல்லாமல் இருந்தவர் பலரின் உதவியால்  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைகிறார்.   அறிவியல் கணிதம் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலை படிப்பு சாத்தியமாகிறது.  2011 ஆம் ஆண்டில்  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண் 196 .75.  

 நூலிழையில் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்தார் கிருஷ்ணவேணி.   தனது மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் வேறு படிப்புக்கு ஆயத்தமாகி விட்டார்.  அப்போதுதான் நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் அகரம் அறக்கட்டளையை அவர் நாடுகிறார்.   திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் படிப்பு ஆகும் செலவை அகரம் அறக்கட்டளை ஏற்றது.   தமிழ்வழியில் படித்ததால் நிறைய சிக்கல்களை சந்தித்துதான் தேர்ச்சியும் பெற்றார். 

 2017ஆம் ஆண்டில் ராணுவத்திலும் அவருக்கு பதவி கிடைத்தது.  தனது அசாத்தியமான திறமையால்  உயரே உயரே சென்று இன்றைக்கு மேஜஸ் அந்தஸ்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  

ட்ஃப்

 சிறுவயதிலேயே நான் மருத்துவராகி ஏழை எளியோருக்கு உதவி செய்வேன் என்று சொல்லி வந்திருக்கிறார்.   அதை நிறைவேற்றியும் வருகிறார்.   இராணுவத்தில் அவர் பணிபுரிந்தாலும் அவ்வப்போது கிராமங்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

 ஜெய்பீம் பட விவகாரத்தில் பாமகவினரும்,  வன்னியர் சமூகத்தினரும் சூர்யாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி மாவட்டம் தோறும் வழக்கு தொடுத்து  நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சூர்யாவுக்கு உலகமெங்கும் ஆதரவுக்கரம் நீள்கிறது என்றால் இது மாதிரியான விதைகளை அவர்  விதைத்து வருவதால்தான். அது இன்று வளர்ந்து மரமாகி நிற்கிறது என்பதை உணர்ந்து தான் சூர்யாவுக்கு இத்தனை ஆதரவுக்கரம் நிகழ்கிறது.

கிருஷ்ணவேணி பற்றிய தகவல் தற்போது இணையங்களில் வைரலாகி வருவதால்,  ‘’ இந்த மனசுக்கு தான் உங்களை இத்தனை கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள்’’ என்கிறார்கள் நெட்டிசன்கள்.