ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை
Nov 29, 2024, 17:30 IST1732881631000
ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் ரூ. 1.77 கோடி அளவிற்குச் சொத்துக்கள் குவித்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனிடையே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.