சென்னை பள்ளியில் திடீர் வாயு கசிவு- மாணவர்களின் தற்போதைய நிலை என்ன?

 
ட்

திருவொற்றியூரில் பள்ளியில் வாயு  கசிந்து விவகாரத்தில் ஆய்வு அறிக்கை வந்த பிறகு முழு தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் கிராமத் தெருவில் உள்ள தனியார் விக்டரி பள்ளியில் நேற்று மதியம் வாயு கசிவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. மாணவிகள் உடனடியாக அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனை 2 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவொற்றியூர் பள்ளியில் செயல்படும் விக்டரி தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை மாவட்ட அலுவலர், சுற்றுச்சூழல் அதிகாரிகள் பள்ளி முழுவதுமே ஆய்வு மேற்கொண்டனர். காற்றில் பரவும் கெமிக்கல் வாய்வை கண்டறியும் VOC  மானிடர் கருவியைக் கொண்டு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிசிக்ஸ் லேப் கெமிஸ்ட்ரி லேப் மற்றும் ஒவ்வொரு வகுப்பறைகள் முதற்கொண்டு பள்ளி முழுவதும் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் முருகன் பள்ளிக்கல்வி இயக்குனர் நடவடிக்கையின்படி ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முழுமையான அறிக்கை இதுவரை தரவில்லை என்றும் பள்ளி முழுவதுமே ஒவ்வொரு வகுப்பறை வகுப்பறையாக அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை எவ்வித அறிக்கையும் வராததால் மீண்டும்  முழுவதுமாக ஆய்வு செய்த பிறகு எங்கிருந்து வாயு கசிந்து வந்தது என்பது தெரியவரும். விரைவில் அது பற்றி அறிக்கை வெளியே வரும் அனைத்தும்  இயக்குனரிடம் அளித்துள்ளோம், பள்ளியின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். திங்கட்கிழமை பள்ளியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் வகுப்பறையில் வகுப்புகள் இயங்காது என்றும் ஆய்வு அறிக்கை முழுவதுமாக வந்த பிறகு நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.