ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வரும் சூழலிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிலருக்கு கொரோனா உறுதியாகிறது. லேசான அறிகுறி தென்பட்டாலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபடுகின்றனர்.

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

இன்று புதிதாக உளுந்தூர்பேட்டையில் 4 மாணவர்களுக்கும், நீலகிரியில் 3 மாணவர்களுக்கும், அரியலூரில் ஒரு மாணவருக்கும் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 22 மாணவ மாணவிகளுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சுகாதாரத்துறைக்கு அளித்த தகவலின் பேரில் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றும் 30 மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.