சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்

 
சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...

சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை  சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து  உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கினார். நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். 

Image

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும், எனவே இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து  அவரது தாயார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையிலிருந்து தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கூறினார். மேலும் தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கோப்புகளை அனுப்பிவைத்தார்.