திருச்சி என்.ஐ.டி.யில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம்..
Aug 30, 2024, 08:16 IST1724985974214
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவிகள் விடுதியில் மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி என்.ஐ.டி யில் மாணவிக்கு, ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த ஊழியர் மீது புகார் அளித்தால் மாணவிகளை விடுதி வார்டன் விமர்சனம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதி வார்டனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவ மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஐ.டி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.