ஓடும் பேருந்தில் ஜன்னல் மீது ஏறி தாளம் போட்ட படி மாணவர்கள் ஆபத்து பயணம்
கும்மிடிப்பூண்டியில் அரசு பேருந்தில் மாணவர்கள் ஜன்னல் கம்பி மீது ஏறி பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் அரசு பேருந்துகள் மூலம் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். சில நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கியபடி பயணித்தாலும் பல நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியபடியே பயணிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே இன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஜன்னல் கம்பி மீது ஏறி பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஜன்னல் மீது ஏறி பேருந்தின் மேற்பரப்பை பிடித்தபடி ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர். சென்னையில் மாணவர்கள் ரூட் தல விவகாரத்தில் அட்டகாசம் செய்து வரும் நிலையில் கிராமப்புறங்களில் மாணவர்கள் காலியாக உள்ள பேருந்துகளிலும் படியிலும், ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி தொங்கியும் பயணித்து வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் ஜன்னல் மீது ஏறி மேற்கூரையில் தாளம் போட்ட படி மாணவர்கள் ஆபத்தை அறியா பயணம்.. மாணவர்களின் செயலால் பயணிகள் அவதி#Tiruvallur | #GovtBus | #Students | #FootBoard | #Passengers | #PolimerNews pic.twitter.com/yuvY21DDGi
— Polimer News (@polimernews) August 28, 2024
அரசு பேருந்துகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.