சாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

 
death

சாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள செட்டுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (47) .இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவருக்கு 2வது மகன் பிறந்து 8 மாதங்கள் தான் ஆகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய மூத்த மகன் கவின் பாண்டியன் (14). சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் செட்டுடையான்பட்டி கிராம மக்கள் சார்பாக கபாடி போட்டி நடத்த ஏற்பாடுகளை செய்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் கபடி போட்டி நடைபெறும் இடத்தில் பணிகள் பாதியில் நிறுத்த பட்டு இருந்த நிலையில் மழை நின்ற பின்னர் நேற்று இரவு பணிகளை தொடர்ந்து செய்து உள்ளனர். இந்த நிலையில் கபடி போட்டி முன்னேற்பாடு வேலைகளில் கவின் பாண்டியனும் ஈடுபட்டு வந்த நிலையில் மைதானம் அருகே உள்ள மின் கம்பத்தில் கயிறு கட்டிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக கவின் பாண்டியன் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. மேலும் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட கவின் பாண்டியனை மீட்டு ஊர் பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவின் பாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கபடி போட்டி முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.