ரயிலின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற மாணவர் மின்சாரம் தாக்கி பலி

 
ழ் ழ்

தூத்துக்குடி மீள விட்டான் ரயில் நிலையத்தில் ரயிலின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க நண்பர்கள் மூன்று பேர் முயலும் போது மின்சாரம் தாக்கியதில் அருண் என்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார்.


தூத்துக்குடி அண்ணா நகர் மற்றும் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அருண், கவின், ஹரிஷ். இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இதில் அருண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கவின் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஷ் ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நேரங்களில் இவர்கள் தங்களது செல்போனில் லைக்குகளை பெறுவதற்காக ரீல்ஸ் மற்றும் போட்டோ எடுத்து போட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை தூத்துக்குடி மீள விட்டான் ரயில் நிலையத்திற்கு சென்று உள்ளனர். அங்கே நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் பெட்டியின் மீது ஏறி செல்போனில் ரீல்ஸ் எடுக்க மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதற்காக ரயில் சரக்கு பெட்டியில் ஏற முயன்றுள்ளனர். இதில் அங்கு சென்று கொண்டிருந்த ஹை பவர் வால்ட்டேஜ் மின்சாரம் கல்லூரி மாணவர் அருண் மீது பாய்ந்துள்ளது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் கை கால்களில் கருகிய நிலையில் காயம் ஏற்பட்டு பள்ளி மாணவன் கவின் மற்றும் ஹரீஷ் ஆகியோர் சித்திக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் மற்றும் சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.