பாலியல் தொல்லையால் உயிரிழந்த மாணவி தற்கொலை- பள்ளி முதல்வருக்கு ஜாமீன்

 
principal

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்த தனியார் பள்ளி மாணவி, தனது வீட்டில் கடந்த 12ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி படித்த பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி(35) என்பவர் அளித்த பாலியல் தொந்தரவு தந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.‌

கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை | investigation  to meera jackson over school student death | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online ...

இந்த வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.‌ ஆசிரியர் மீது மாணவி ஏற்கனவே புகார் அளித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (45) என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.‌ 

இந்நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், தனக்கு ஜாமீன் கேட்டு கோவை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் பள்ளி முதல்வருக்கு ஞாயிறுதோறும் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.‌ குடும்பத்தாருக்கு ஐந்து லட்சம் இழப்பீடு தர அராசங்கத்துக்கு போக்ஸோநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.