26வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை!

 
1

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் எர்ணாகுளம் திருவானியூர் பகுதியில் உள்ள குளோபல் பப்ளிக் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் மிஹிர். கடந்த ஜனவரி 15ம் தேதி தனது வீட்டின் 26வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஒரு மணி நேரத்திற்குள் சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். இதன் காரணமாக, அவனது தாய் ராஜ்னா, தன் மகனின் மரணத்திற்கான காரணத்தைத் தேடத் தொடங்கினாள். அவனது நண்பர்கள் மற்றும் பள்ளித் தோழர்களிடம் விசாரித்த பிறகு, இறுதியாக பதில் கிடைத்தது.

View this post on Instagram

A post shared by Rajna Pm (@rajnapm)

பள்ளியில் சக மாணவர்களின் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக சிறுவனின் தாய் ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, ராஜ்னா காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) மற்றும் கேரள முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ராஜ்னா தற்போது தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது மகனின் தற்கொலைக்கான பின்னணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், என் மகன் எப்போதும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான குழந்தையாக இருந்தான். ஆனால் பள்ளியில் நடந்த கொடுமைகள் அவரை கடுமையாக பாதித்துள்ளன. பள்ளியிலும், பள்ளிக்குச் செல்லும் பேருந்திலும், மிஹிரின் தோல் நிறம் மற்றும் உடல் தோற்றம் காரணமாக வேறு சில மாணவர்கள் தொடர்ந்து அவரை கேலி செய்து வந்துள்ளனர்.

மிஹிர் தொடர்ந்து அடித்தல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் உட்பட அனைத்து வகையான கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட நாளில், மிஹிர் பள்ளி கழிப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கழிப்பறை இருக்கையை நாக்கால் நக்கச் செய்யுமாறு துன்புறுத்தியுள்ளனர். மிஹிர் தலையை கழிப்பறையில் வைத்து, அவர் மீது தண்ணீர் ஊற்றி சித்திரவதை செய்துள்ளனர். மிஹிர் இறந்த நாளில், ஒரு குழு மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் "fxxk nigga, அவர் உண்மையில் இறந்துவிட்டார்" என்று பதிவிட்டு, அதைப் பற்றி லைக் செய்து அரட்டை அடித்து கொண்டாடினர்.

மிஹிர்

இது தெரிந்திருந்தும், பள்ளி நிர்வாகம் தங்கள் நற்பெயரை இழக்காதபடி அமைதியாக இருப்பதாக அவரது தாயார் ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார். ராஜ்னாவின் புகாரின் அடிப்படையில் திருப்புனித்துரா ஹில் பேலஸ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவர் குழுவின் கணக்கிலிருந்து இப்போது இன்ஸ்டாகிராமில் நீக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆதாரங்களை மீட்டெடுக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.