இடையூறாக இருந்த காதலனின் மனைவியின் கழுத்தை இறுக்கி..பெண்ணுக்கு கடும் தண்டனை

 
ல்

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த காதலன் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது நாமக்கல் மகளிர் நீதிமன்றம்.

 நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன்.   இவரது மனைவி கிருஷ்ணவேணி.   அதே பகுதியில்  ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகத்தை கிருஷ்ணவேணி தான் கவனித்து வந்துள்ளார். 

 ஓட்டல் நடத்தி வந்த கிருஷ்ணவேணிக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார் என்பவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  இவர்களின் கள்ள உறவு விவகாரம் வெளியே தெரியவர சிவகுமாரின் மனைவி அம்பிகா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.   

எரு

 சிவகுமாருன் உல்லாசம் அனுபவிப்பதற்கு அம்பிகா இடையூறாக இருக்கிறார் என்று ஆத்திரப்பட்ட கிருஷ்ணவேணி அவரை தீர்த்து கட்டிவிட்டினால்தான் சிவகுமாருடன் உல்லாசமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் கிருஷ்ணவேணி.   4. 9 .2013 அன்று இரவு எட்டு முப்பது மணிக்கு சிவகுமார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் கிருஷ்ணவேணி.

அப்போது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார் அம்பிகா.   அவருடன் நல்ல விதமாக பேசுவது மாதிரி பேசி டீ போட்டுக் குடித்து இருக்கிறார்கள்.  ஆனால் அம்பிகாவுக்கு தெரியாமல் அந்த டீயில் மயக்க மருந்து கலந்து இருக்கிறார்.   டீ குடித்த அம்பிகா  மயங்கியதும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்.  ஆனாலும் போலீஸ் விசாரணையில் கிருஷ்ணவேணிதான் கொலையாளி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த  வழக்கு நாமக்கல் மகமகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அதில் கிருஷ்ணவேணிக்கு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.