ஸ்டாலின் அவர்களே உங்கள் பெரியப்பாவுக்கு பாதுகாப்பு இல்லை - செல்லூர் ராஜு..!

 
1 1

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் பகுதியில் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது போராட்டத்தை தொடர்ந்ததால் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உட்பட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை பார்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவனியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த சம்பவம் ஒரு சாதாரண விஷயம் கிடையாது. சம்பவத்தை கண்டித்து ஒரு தீக்குச்சியை உரசி போட்டது போல் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்துள்ளார். 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் சமூக விரோதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சமூக விரோதிகளை கண்டு காவல்துறை பயப்படும் அளவிற்கு அவர்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, என்கிற நிலை தான் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. 

போதைப் பொருள் நடமாட்டம் கஞ்சா கிலோ கணக்கில் விற்கப்படுகிறது, அதையெல்லாம் தடுக்க 2.0 ஒன்று என்னென்னவோ ஓ போட்டு பார்த்தார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதே காவல்துறை எடப்பாடி கைக்கு வந்தால் இது எல்லாம் கட்டுப்படுத்தப்படும். எம்ஜிஆர் அனைவருக்கும் பிடித்தவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரியப்பா என்று சொல்கிறார். பெரியப்பா என்று சொல்லக்கூடிய எம்ஜிஆர் திமுக வை வளர்த்தெடுத்தவர்.

திமுக ஆட்சியிலேயே அவர்கள் சிலைக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் அவர்களே உங்கள் பெரியப்பாவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இதை கொஞ்சம் கவனத்தில் வையுங்கள். காவல்துறையிடம் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் இன்றைக்கு மதுரையில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர்  எம்ஜிஆர் சிலைக்கே பாதுகாப்பு இல்லை எடப்பாடி யாருக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.சம்பவம் நடந்து 50 மணி நேரம் ஆகியும் காவல்துறை இன்னும் குற்றவாளிகளைகண்டுபிடிக்கவில்லை விரைந்து காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.