சீக்கிரம் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள்- எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

 
ஃப்

சீக்கிரம் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள், ஏன் இன்னும் தயக்கம் என முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

vizha

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, கழக முப்பெரும் விழா நாளை நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்வும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாவும் நடைபெறவது வழக்கம். இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெற்றுவருகிறது. திமுக முப்பெரும் விழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு  ‘ஸ்டாலின் விருது’ வழங்கப்பட்டது. 

விருது வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், “சீக்கிரம் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் அடுத்தது யார் என்பதை கை காட்ட வேண்டும். பேராசிரியர் அன்பழகன் இருந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கவில்லையா? அதேபோல் காலம் தாழ்த்தாமல் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும்” என்றார்.