பொங்கல் பண்டிகை...தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 
train

பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 11ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் ரயில் (06099) மறுநாள் காலை 09.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். ஜனவரி 12ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில் (06100) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.