பொங்கல் பண்டிகை...திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
4, 5, 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06190) மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில் (06191) இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன . இதற்கான முன்பதிவு தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.