குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

 
train

குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் எழும்பூர் - கன்னியாகுமரி, சென்னை சென்டிரல் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

train

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை எழும்பூரில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(வண்டி எண்.06053), மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 26-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(06054), மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Image

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில்(06057), மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 26-ந்தேதி இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(06058), மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்” எனக் கூறப்பட்டுள்ளது.