விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

 
BUS

வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபி விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்று முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

பொதுவாகவே வார இறுதி நாட்களில் சென்னை உள்ளிட்ட பெறுநகரங்களில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரிகளில் தங்கி படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அத்துடன் கூடுதலாக பண்டிகை விடுமுறையும் சேர்ந்து வந்தால் 3 நாட்கள், 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கும். அந்தவகையில் செப்.14 (சனிக்கிழமை), செப்.15 (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), செப்.17 (மிலாடி நபி) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையொட்டி பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்துள்ளது

*அதன்படி,  செப்.13,14 ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

bus

*செப்.13,14 ஆகிய நாட்களில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து  20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

*தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க http://tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்