மெட்ரோ ரயிலில் தீப்பொறி- ரயிலை நிறுத்தி பயணிகள் வெளியேற்றம்

 
மெட்ரோ ரயில்

இயந்திர கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெட்ரோ


சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விம்கோ நகர் - விமான நிலையம் வரை  செல்லக்கூடிய மெட்ரோ ரயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டிகள் தீப்பொறி கிளம்பியதால் ரயிலில் பயணித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்  உடனடியாக ரயிலில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது. பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை நீல நிற வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு 15 நிமிடங்களுக்கு பின் சரி செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.