ஆக.17 வரை சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

 
ரயில் சேவை


தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில விரைவு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 17ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

தாம்பரம் ரயில் நிலையத்தில்  மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக ஏற்கனவே மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல்  29 விரைவு ரயில்களின் சேவையில் ஆக.14-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில விரைவு ரயில்களின் சேவையில் ஆக.17-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.16-ம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வே

பகுதி ரத்து: சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.


சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய பொதிகை விரைவு ரயில் (12661), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும்.


சென்னை எழும்பூர் - கன்னியாகுமரிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (12633), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - தூத்துக்குடிக்கு ஆக.15, 17 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு முத்து நகர் விரைவு ரயில்(12693), சென்னை எழும்பூர் - மதுரைக்குஆக.15-ம் தேதி இரவு 9.40 மணிக்கு பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு ஆக.15-ம் தேதி இரவு 10.15 மணிக்கு உழவன் விரைவு ரயில் (16865) ஆகிய ரயில்கள் எந்த மாற்றமும் இன்றி புறப்பட்டு செல்லும்.

செங்கோட்டை - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் பொதிகை விரைவு ரயில் (12662), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டில் நிறுத்தப்படும். 

ரயில்வே

திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் விரைவு ரயில் (12632), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூருக்கு ஆக.15-ம் தேதி புறப்படும் விரைவு ரயில் (12634), செங்கல்பட்டு -எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பி விடப்படும் ரயில்கள்: கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு ஆக.14-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (12641), விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக திருப்பிவிடப்பட உள்ளது. கூடுதல் நிறுத்தமாக, பெரம்பூர் ரயில் நிலையத்தில் காலை 10.55 மணிக்கு நின்று செல்லும்.

ஹவுரா - திருச்சிராப்பள்ளிக்கு ஆக.15-ம் தேதி விரைவு ரயில் (12663), பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக திருப்பிடப்படும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம் மார்க்கத்தில் செல்லாது.

சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு ஆக.17-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (16175), 1.25 மணி நேரம் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.