கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன் ; அதிர்ச்சி தரும் சம்பவம்!!

 

கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன் ; அதிர்ச்சி தரும் சம்பவம்!!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜக வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது. சேலம் மாவட்டம் பட்டர்பிளை மேம்பாலத்தில் ஆதர்ஷ் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வானதி சீனிவாசன் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன் ; அதிர்ச்சி தரும் சம்பவம்!!

தேசிய அளவில் பாஜகவில் முக்கிய பங்கு வகித்து வரும் வானதி சீனிவாசன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசனை தோற்கடித்து எம்எல்ஏவாக அரியணை ஏறினார். வானதி சீனிவாசனுக்கு ஆதர்ஸ், கைலாஸ் என்று இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கோயமுத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான புகைப்படத்தையும் வானதி இணையத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது ஆதர்ஷ் விபத்தில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன் ; அதிர்ச்சி தரும் சம்பவம்!!

முன்னதாக கடந்த மாதம் 31ஆம் தேதி ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகன் கருணாசாகர் சென்ற கார் விபத்தில் சிக்கி ஏழு பேர் பலியாகினர். அதிவேகமாக வந்ததால் கோரமங்களா பகுதியில்சாலை தடுப்பில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது .