4வது போக்சோ!! சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

 
siva1

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

IO in Siva Sankar Baba's Pocso case transferred - DTNext.in

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் இவர் மீது தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் ஜூன் 18-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் ஆன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதேபோல் மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெங்களூருவில் வசிக்கும் அவரது தாய் புகார் கொடுத்துள்ளார். இந்த 2 புகார்களின்பேரில் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த வாரம் வேறொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபா மீது இதுவரை மொத்தம் 4 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவசங்கர் பாபாவிற்கு முதல் போக்சோ வழக்கில் மட்டுமே தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இரண்டு மற்றும் மூன்றாவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் கிடைத்தது. அதேபோல  சிவசங்கர் பாபா வின் மீது போடப்பட்டுள்ள பெண் வன்கொடுமை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. ஆனால் முதல் போக்சோ மற்றும் தற்பொழுது போடப்பட்டுள்ள ஆறாவது போக்சோவில் சிவசங்கர் பாபா சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், நிபந்தனை நிஜாமின் பெற்றாலும் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வேண்டும் எனவே சிவசங்கர் பாபா தரப்பில் நிபந்தனையின்றி ஜாமீன் வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் நிபந்தனை இல்லாமல் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தார்.  இதனையடுத்து இன்று சிவசங்கர் பாபா மீது உள்ள பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைந்து ஒட்டி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி  வருகின்ற 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.