“உழைப்பிற்கு பணம் கேட்டால் பார்த்திபன் தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர்”

 
ப்

எங்கள் உழைப்பிற்கு தான் பணம் கேட்டோம், ஆனால் பார்த்திபன் தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர் என கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

parthiban

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த கிராபிக்ஸ் நிறுவன மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. TEENZ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை உறுதி அளித்தபடி முடித்துத் தரவில்லை என்றும் கூடுதலாக தொகை கேட்பதாகவும் ரெகுலர் ஸ்டூடியோஸ் கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் மீது பார்த்திபன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் பந்தய சாலை போலீஸ் வழக்குப்பதிந்தனர்.  சிவபிரசாத் கடந்த ஜூன் 4ஆம் தேதி 88 லட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டது, குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காதது தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில், தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் வெளியிட்டுள்ள வீடியோவில், “லியோ, மாஸ்டர், பிச்சைக்காரன் 2, மாநகரம், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு வேலை பார்த்துள்ளோம். தற்போது நடிகர் பார்த்திபன் சாருடைய டீன்ஸ் படத்திற்கு வேலை பார்த்தோம். அவர் நிறைய ஷார்ட்ஸ்களை செய்ய சொல்லியிருந்தார். வேலை அதிகமாக இருந்ததால் சிறிது தாமதமானது. இதனால் காவல்துறையினர், பாரத்திபன் தரப்பில் இருந்து மிரட்டல் விடுகிறது. எங்கள் உழைப்பிற்கு தான் பணம் கேட்டோம், ஆனால் பார்த்திபன் தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர். வேலை முடிக்கவில்லை என சொல்வது பொய், வேலை செய்துமுடித்த பைலை கேட்கின்றனர்.. மீதி பணத்தை கொடுத்தால் கொடுத்துவிடுவோம்” எனக் கூறியுள்ளார்.