பாஜகவை தோற்கடிப்பதே ஒற்றை இலக்கு - சீதாராம் யெச்சூரி பேட்டி

 
mkst

இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோல் விடுத்துள்ளார். 

Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக மூத்த நிர்வாகிகள் , ஆ.ராசா, கே.என்.நேரு,ஆர்.எஸ் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, “மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன், கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினேன். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். மதசார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசித்துள்ளோம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. அதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். பாஜகவை தோற்கடிப்பதே ஒற்றை இலக்கு” என்றார்.