சம்பவத்தன்று நடந்தது இதுதான்! பாடகர் மனோவின் மனைவி விளக்கம்
எனது மகன்கள் தலைமறைவாக இல்லை என பாடகர் மனோவின் மனைவி ஜமிலா விளக்கம் அளித்துள்ளார்.
மதுபோதையில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, சாஹிர் மீது சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவருக்கும் போலீசார் வலைவீசி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் மனோவின் மனைவி ஜமிலா, “எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. தற்போது வரை மகன்கள் எங்க் இருக்கிறார்கள் என தெரியவில்லை. சம்பவத்தன்று தன்னையும், தனது மகன்களையும் 10க்கும் மேற்பட்டோர் தாக்கினர். தகராறு செய்தவர்கள் தாக்கியதில் எனக்கு, என் 2 மகன்கள், அவரது நண்பர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கியவர்களுக்கு பிரச்சனை வேண்டாமென்று தாயுள்ளத்தோடு போலீசில்நாங்கள் புகார் அளிக்கவில்லை. பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என நினைத்தோம். எனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர்” என்றார்.