அம்பத்தூரில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு எஸ்.ஐ உயிரிழப்பு..

 
அம்பத்தூரில்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு எஸ்.ஐ உயிரிழப்பு..  

 சென்னை அம்பத்தூரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சரவணனுக்கு  திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  

cardiac arrest - நெஞ்சுவலி
மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரவணன் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சிடைந்தனர். பின்னர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.