தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. பாட புத்தகங்களின் விலையை உயர்த்திய அரசு..

 
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. பாட புத்தகங்களின் விலையை உயர்த்திய அரசு.. 

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி 1 முதல் 4ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள்  ரூ.40 வரை உயர்த்தப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்காக  அரசு ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. அதன்படி  பள்ளிக்கல்வித்துறையின் கீழ்  செயல்படும் அரசு பாடநூல் கழகம் சார்பில் ஆண்டுக்கு சுமார் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில்  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாமலும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் குறைந்த விலையிலும் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல்  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு  சலுகை விலையில் விற்கப்படுகின்றன.  

dpi

இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக  புத்தகங்களின் விலையை பள்ளிக்கல்வித்துறை உயர்த்தியுள்ளது. வகுப்புகள் வாரியாக ஒவ்வொரு புத்தகத்தின் பழைய விலை புதிய விலை அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் ஒன்றிற்கு, 1-4 வகுப்புகளுக்கான பாட புத்தகம் ரூ.30 முதல் 40 வரையும், 5-7 வகுப்பு பாட புத்தகங்கள் ரூ.30-50 வரையும், 8 ம் வகுப்பு பாட புத்தகம் 40 முதல் 70 ரூபாய் வரையும், 9-12 வகுப்பு புத்தகங்கள் 50-80 வரையும், ஒருசில புத்தகங்கள் 90 ரூபாய் வரை விலை உயர்ந்தப்பட்டுள்ளன. அதேபோல் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி உள்ளிட்ட புத்தகங்களின் விலை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.  

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. பாட புத்தகங்களின் விலையை உயர்த்திய அரசு.. 

அதன்படி மொத்த தொகுப்புகளாக வகுப்பு வாரியாக புத்தக தொகுப்புகள் பெறும்போது, ரூ.390க்கு விற்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550க்கும், 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது. 3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கும்,  4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து ரூ.650-க்கும், 5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கும், 6ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கும் 7ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200ம், 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000க்கும், 9ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கும், 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கும் விற்பனையாகிறது.  காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலை 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.