"விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக நிர்பந்தம்” - பெ.சண்முகம்

 
ச் ச்

கரூர் பிரச்சனையை பயன்படுத்தி விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நிர்பந்தத்தை பாஜகவினர் ஏற்படுத்தியுள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர் பாபுவின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது!' - சிபிஎம்  மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டம் | CPIM State Secretary P Shanmugam  condemns Minister ...

புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கரூர் வழக்கில் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மனுத்தாக்கல் செய்தவர்களே எங்கள் பெயரில் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளனர்.அதன் மீது தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  பாஜக தாக்கல் செய்த வழக்கில் தான் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது பல்வேறு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. 

தமிழ்நாடு சாராத ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட எஸ்ஐடி என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இல்லையா என்றும் அதிகாரிகளின் நேர்மையை சந்திக்கக்கூடிய வகையிலும் தான் நீதிபதி கூறிய கருத்து உள்ளது. கரூர் விவகாரத்தில் உண்மை வெளியே வரவேண்டும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன்பு நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து அல்ல.... அது என்ன குறைபாடுகள் கண்டறியப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் சில கருத்து மாற்றுக் கருத்தில்லை. சிபிஐக்கு மாற்றப்பட்டதால் ஏற்கனவே உள்ள எஸ்ஐடி விசாரணை என்ன ஆகும் என்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை கண்டுபிடித்த அனைத்தும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வரும். சிபிஐக்கு மாற்றப்பட்ட தீர்ப்பை இடைக்கால தீர்பாகத்தான் தான் பார்க்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு கேட்டதாக கூறி மனுத்தாக்கல் செய்தவர்களே நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தி இது உறுதி செய்யப்பட்டால் சிபிஐக்கு  மாற்றப்பட்ட வழக்கு  ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பல கட்சிகளுக்கு பிரசாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது கார்ப்பரேட் தான்  வழிமுறை சொல்கிறார்கள். " - பெ.சண்முகம் | P Shanmugam CPM leader talks about  his politics ...

கரூர் விவகாரத்தில் தவெக பாஜக அதிமுக அரசியல் செய்வது ஏற்புடையதல்ல இது ஆரோக்கியமான அரசியல் இல்லை. கரூரில் நடந்தது சதி என்று திமுக அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று அவதூறு பிரச்சாரம் தான் செய்தனர். தவெகவின் அனைத்து நிகழ்வுகளிலுமே மயக்கமடைவது ஒன்று இரண்டு விபத்துக்கள் மரணம் என அனைத்திலும் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை. அனைத்து நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அப்புறம் எப்படி தவெகவை முடக்குகிறார்கள் என்று பிரச்சனை எங்கு வருகிறது. விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் முடிவை தெளிவாக தெரிவித்துள்ளார். அருணா ஜெகதீசன் விசாரணையை நியமித்தது தமிழ்நாடு அரசின். எஸ்ஐடியை என்பது நீதிமன்றம். விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது அவரை ஏன் கைது செய்யவில்லை இவரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பது எப்படி நியாயமாக இருக்கும். கரூர் பிரச்சனையை பயன்படுத்தி விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் தான்  விஜய் சார்பாக அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர், அதன் விளைவு தான் இன்று  வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

பாஜக கொள்கை எதிரி திமுக அரசியல் எதிரி என்று ஏற்கனவே விஜய் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் கரூர் சூழ்நிலையை பயன்படுத்தி விஜயை தங்கள் அணிக்கு கொண்டுவர பாஜக முயற்சி எடுக்கிறது. பல்வேறு பகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் கரூர் சம்பவம் நடந்த இரண்டாவது நாளே பாஜக பெரிய நாடாளுமன்ற குழுவை அனுப்புகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். அதையே பாஜக அனுப்பிய நாடாளுமன்ற குழுவும் தெரிவித்து கரூர் சம்பவத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று தெரிவித்துச் சென்றனர். இதிலிருந்து தான் விஜையை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. தவெக அதிமுக பாஜக சேர்ந்து வந்தாலும் பிரிந்து வந்தாலும் எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது, பிரிந்து இருப்பவர்கள் சேர்ந்தால் அது பலமான அணியாக இருக்கத்தான் செய்யும்” என்றார்.